முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
புகைப்படச் செய்திகள்

பிரபுபாதரின் பிறப்பிடத்தைத் திறந்து வைத்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Tulasipati · 5 அக்டோபர், 2021 · ⏱️ 1 நிமிட வாசிப்பு

எழுத்து அளவு

செப்டம்பர் 1, 2021, கொல்கத்தா: பிரபுபாதர் 1896இல் தெற்கு கொல்கத்தாவின் தோலிகுங்கே பகுதியில் தோன்றினார். பிரபுபாதர் தோன்றிய அந்த புனிதமான இடமானது பல்வேறு சிரமங்களுக்குப் பின்னர், மாநில அரசின் நேரடி உதவியினால், தற்போது இஸ்கான் இயக்கத்திற்குச் சொந்தமாகியுள்ளது. இங்குள்ள பலா மரத்தின் அடியில்தான் பிரபுபாதர் பிறந்தார். குறுகிய காலத்தில் இதனைப் புதுப்பித்து, செப்டம்பர் 1ஆம் தேதியன்று பிரபுபாதரின் பாதச் சின்னம் நிலைநாட்டப்பட்டது. காணொளி மூலமாக நிகழ்ந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் செல்வி மம்தா பானர்ஜி அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். சிறப்பான தருணத்தில் பிரபுபாதருக்கு மரியாதை செலுத்துவதைப் பெருமையாக நினைப்பதாக அவர் தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்டது: 7 அக்டோபர், 2021

← முகப்பு