முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
புகைப்படச் செய்திகள்

ரத யாத்திரையை மாநில திருவிழாவாக அறிவித்த முதல்வர்

Bhagavad Darishanam · 9 பிப்ரவரி, 2022 · ⏱️ 1 நிமிட வாசிப்பு

எழுத்து அளவு

டிசம்பர் 19, லூதியானா, பஞ்சாப்: இஸ்கான் பஞ்சாப் சார்பாக ஆண்டுதோறும் நிகழும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமருடைய ரத யாத்திரையின் 25ஆவது ஆண்டு விழாவில் பஞ்சாப் முதல்வர் திரு சரண்ஜித் சிங் சன்னி அவர்கள் பங்கேற்று, இவ்விழாவினை மாநில அரசின் வருடாந்திர திருவிழாவாக அறிவித்தார். மேலும், இஸ்கான் லூதியானாவின் வளர்ச்சிக்காக ரூபாய் 2.51 கோடியை அரசு நிதியில் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார். முதல்வருடன் இணைந்து பல்வேறு அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ரத யாத்திரையில் கலந்து கொண்டனர். சிறப்புமிக்க அந்த ரத யாத்திரையில் இஸ்கான் பக்தர்களும் பொதுமக்களும் நூற்றுக்கணக்கில் ஒன்றுகூடி நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

புதுப்பிக்கப்பட்டது: 21 பிப்ரவரி, 2022

← முகப்பு